"தீவிர உச்சத்துக்கு போன நோய்!".. 'சிலிண்டரால்' ஓங்கி அடித்த பின் கணவர் செய்த காரியம்'.. 'குழந்தைகள்' முன் நடந்த 'சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான சுப்ரமணி. இவரது மனைவி 37 வயதான மேனகா.

"தீவிர உச்சத்துக்கு போன நோய்!".. 'சிலிண்டரால்' ஓங்கி அடித்த பின் கணவர் செய்த காரியம்'.. 'குழந்தைகள்' முன் நடந்த 'சோகம்'!

மீனவரான சுப்ரமணி, சில மாதங்களாகவே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மன அழுத்தம் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறில் இருந்த சுப்ரமணி, திடீரென கோபமடைந்து வீட்டில் இருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகாவின் தலையில் போட்டுள்ளார்.

இதனால் மேனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்ததும் பயந்துபோன, சுப்ரமணி, தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மீட்டதோடு முத்தியால்பேட்டை போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் இறந்துபோன கணவன், மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் - மனைவிக்கு இடையே உண்டான தகராறு காரணமாக நடந்த இந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்