வெறும் 13 நிமிஷத்துல.. அதுவும் 2 கிலோவா..? ’பரோட்டா’ சூரியை மிஞ்சிய பிரியாணி பிரியர்.. யாருய்யா இவரு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயில் திருவிழா ஒன்றில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டு 2 கிலோ பிரியாணியை சாப்பிட்டு அசத்தியுள்ளார் வினு என்ற நபர்.

வெறும் 13 நிமிஷத்துல.. அதுவும் 2 கிலோவா..? ’பரோட்டா’ சூரியை மிஞ்சிய பிரியாணி பிரியர்.. யாருய்யா இவரு

CSK vs RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பரோட்டாவும் பிரியாணியும்…

தமிழர்களின் தினசரி உணவுப் பட்டியல்களில் அதிகமாக இடம் பிடிக்கும் உணவுகளாக பிரியாணியும் புரோட்டாவும் இணைந்துவிட்டன. இந்த இரண்டு உணவுப் பொருட்களை சமைத்துக் கொடுக்கும் உணவகங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். அதுபோல வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த விதவிதமாக பிரியாணியும் புரோட்டாவும் தற்போது சமைக்கப்பட்டு வருகின்றனர். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் இந்த இரு உணவுகளையும் மின்னல் வேகத்தில் சாப்பிட்டு சாதனைப் படைத்துள்ளா கன்னியாகுமாரியைச் சேர்ந்த வினு என்ற நபர்.

Man ate 2 kg briyani in 13 minutes in a competition

பிரியாணி சாப்பிடும் போட்டி…

கன்னியாகுமரி மாவட்டம் பூலன்கோடு என்ற பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஒரு வித்தியாசமான போட்டியை நடத்தியுள்ளனர் அப்பகுதி மக்கள். அதில் 2 கிலோ வெஜிடபுள் பிரியாணியை யார் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கிறார்களோ அவர்களுக்கு 2000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டியில் 14 ஆண்களும் ஒரு பெண்ணும் கலந்துகொண்டுள்ளனர்.

Man ate 2 kg briyani in 13 minutes in a competition

பரிசைத் தட்டிச் சென்ற வினு…

இந்த போட்டியில் கலந்துகொண்ட வினு என்பவர் வெறும் 13 நிமிடங்களில் மொத்த பிரியாணியையும் சாப்பிட்டு முடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதல் பரிசாக 2000 ரூபாய் பெற்றுள்ளார்.  பாலப்பள்ளம் தனிஷ் இரண்டாம் பரிசையும், கட்டிமாங்காடு சதீஷ் மூன்றாம் பரிசை பெற்றுள்ளார். இந்த வித்தியாசமான போட்டி பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பார்க்கப்பட்டு வருகின்றன.

Man ate 2 kg briyani in 13 minutes in a competition

பிரியாணி மட்டுமல்ல புரோட்டா போட்டியிலும் வெற்றி…

இந்நிலையில் முதல் பரிசை வென்ற வினு இதற்கு முன்பு தன்னுடைய இளம் வயதில் ஒரே நேரத்தில் 43 புரோட்டாக்களை சாப்பிட்டு அசத்தியவராம். இதுபற்றி பேசிய வினு ‘இதுபோல நான் நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தண்ணீர் குடித்தல், பரோட்டா சாப்பிடுதல் என பல போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். என்னுடைய 19 வயதில் 43 பரோட்டாக்கள் சாப்பிட்டு வெற்றி பெற்றேன். அதுபோல ஒரே நேரத்தில் 10 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?

MAN, BRIYANI, MAN ATE 2 KG BRIYANI, COMPETITION, பிரியாணி, பரோட்டா

மற்ற செய்திகள்