மாலை மருந்து வாங்கிய ‘மெடிக்கலில்’ நள்ளிரவு ‘கைவரிசை’.. போலீஸில் கையும் களவுமாக சிக்க வைத்த ‘சமூக இடைவெளி கட்டை’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மெடிக்கலில் திருட முயன்று போது கொரோனா சமூக இடைவெளி கட்டையால் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையம் அருகே மெடிக்கல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மெடிக்கல் கடை திறக்கப்பட்டு இருந்துள்ளது. திடீரென கடைக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் கையில் கடப்பாரையுடன் ஓடியுள்ளார். அப்போது கடைக்குமுன் சமூக இடைவெளிக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கட்டையில் கடப்பாரையுடன் மோதி கீழே விழுந்து போலீசாரிடன் சிக்கினார்.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் மெடிக்கலில் திருடிய 37,000 பணத்தை கைப்பற்றினர். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 53 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பழைய திருட்டு வழக்கு ஒன்றில் கைதான லட்சுமணன் 5 நாள்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து விடுதலை ஆகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த மெடிக்கல் கடையில் தலைவலிக்கு மருந்து வாங்க லட்சுமணன் வந்துள்ளார். அப்போது மெடிக்கல் கடையின் உரிமையாளர் பணத்தை கல்லா பெட்டியில் வைப்பதை பார்த்துள்ளார். உடனே நள்ளிரவு கடப்பாரை மூலம் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று திருடியுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் அவர் சிக்கிக் கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்