'காரில் ஏசியை போட்டுட்டு தூங்குனதுனால இந்த கதியா?' பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோட்டில் காரை நிறுத்தி, ஏசி போட்டுக்கொண்டு உறங்கியவர் இறந்தது குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'காரில் ஏசியை போட்டுட்டு தூங்குனதுனால இந்த கதியா?' பதறவைக்கும் சம்பவம்!

அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவத்தில் திருச்சியைச் சேர்ந்த 44 வயதான அனந்த கிருஷ்ணன் என்பவர் ரகுபதி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பப் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர்.

இவர் ஈரோட்டின் முத்துக்கவுண்டன் பாளையம் - பரிசல் துறை சாலையில் காரில் மயங்கிய நிலையில் இருந்தபோது, அவரது நண்பர்கள் இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியில் இறந்திருக்கிறார். விசாரனையில், இவர் வாகனத்தில் ஏசியை ஆன் செய்துவிட்டு, வாகனத்திலேயே தூங்கியுள்ளதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளதாகத் தெரிகிறது.

வாகனத்தில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு காரின் ஏசி வழியே நுழைந்து, மூச்சில் கலந்து ரத்தத்தில் இருக்கும் திசுக்களுக்கான ஆக்ஸிஜனைக் குறைவாக அளித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, ரீ-சர்குலேஷன் ஆப்ஷனில் வைக்க வேண்டும். இந்த சூழலில், அனந்த கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SAD, AC, CAR, DEAD