எங்க மகனுக்கு ஏன் 'இப்படி' ஒரு 'பெயர்' வச்சோம்னா... 'மணமகள் பெயரு அதுக்கு மேல ஹைலைட்...' - 'டிரெண்டிங்' ஆகும் 'திருமண' அழைப்பிதழ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பாஜக மட்டும் எதிரி கட்சி இல்லை, கம்யூனிசம் என்ற வார்த்தையும் அவருக்கு அலர்ஜி தான்.
ஆனால் தமிழகத்திலோ சோசலிசத்துக்கும் மம்தா பானர்ஜிக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. அதவாது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் அவரது மூன்றாவது மகனின் திருமண அழைப்பிதழ்தான்.
தோழர் மோகன் தன் கட்சியின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக, தன் முதல் மகனுக்கு 'கம்யூனிசம்' எனவும், ரஷ்யத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும் மூன்றாவது மகனுக்கு 'சோசலிசம்' என பெயர் வைத்ததாக கூறுகிறார்.
இந்நிலையில், மூன்றாவது மகன் சோசலிசத்திற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அங்கு தான் மிக பெரிய ட்விஸ்ட்.
மணப்பெண்ணின் குடும்பம் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பம். இளம் தலைவராக காங்கிரஸில் வலம் வந்த மேற்கு வங்கத்தின் சிங்க பெண் என்றழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் பெயரை தங்கள் மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் பழனிசாமி நீலாம்பாள் தம்பதியினர்.
தற்போது மம்தா பானர்ஜிக்கும், சோசலிசத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக களமாடுகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால் சேலத்தில் கம்யூனிஸ்ட் குடும்பமான மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி. இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்