மாமல்லபுரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தென்பட்ட பழங்கால பொருள்?!.. கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாமல்லபுரம் கடல் உள்வாங்கியதை அடுத்து பழங்காலத்து கோயில் பொருட்கள் ஒதுங்கி இருந்ததைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.

மாமல்லபுரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தென்பட்ட பழங்கால பொருள்?!.. கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்..!

Also Read | தனியாக கிடந்த ஃப்ரிட்ஜ்.. “உள்ள என்ன இருக்குன்னு பாருங்க”.. திறந்துப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போன அதிகாரிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை திடீரென கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இவை கடலில் அடித்து செல்லப்பட்ட கோயில்களில் ஒன்றாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதனால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் கடற்கரைக்கு சென்று அங்கு கிடந்த பொருட்களை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்வர்கள், கடந்த 2 நாட்களாக கடல் அரிப்பு காரணமாக மணல்கள் அப்பகுதியிலிருந்து நீங்கியது. அதனால் கடற்கரை கோவிலின் பின்புறத்தில் சில கட்டமைப்புகள் வெளியே தென்பட தொடங்கியது. குறிப்பாக செங்கற்கள் மற்றும் கோவில் தூண்கள் போன்றவை வெளியே தெரிந்தன.

அதேபோல் சிறியதாக கலசம் போன்ற அமைப்புடைய கோபுரம் போல் வெளியே தெரிந்தால் இது கோவிலாக இருக்கலாம் என,  அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கடற்கரையில் கிடந்த பானை ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்பகுதி பொதுமக்கள் சேகரித்துள்ளனர். மேலும் ஒரு நாணயமும் இப்பகுதியில் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Mamallapuram sea suddenly receded found ancient temple stoneware

இப்பகுதியில் அடிக்கடி கடலரிப்பு ஏற்பட்டாலும் இந்த அளவிற்கு கட்டுமானங்கள் முழுமையாக வெளியே தெரிந்ததில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாமல்லப்புரம் கடற்கரை கோயில் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அதிகாரிகள், தற்போது இந்த கலசங்கள், தூண்கள், செங்கல்களை பார்க்கும்போது சுற்றுச்சுவர் கட்டிடம் போன்றும் தெரிகிறது. கோவிலை பாதுகாக்க போடப்பட்ட சேதமடைந்த கற்கள் போன்றும் தெரிகிறது. கடற்கரையில் ஒதுங்கி இருப்பது பழங்கால கோயில்தான் என உறுதியாக இப்போது கூறமுடியாது.

சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தொல்லியல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று அல்லது நாளை தொல்பொருள், கல்வெட்டு ஆய்வாளர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிடக்கலை பேராசிரியர் கொண்ட ஆய்வுக் குழுவினர் வந்து கலசத்தையும், தூண்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின்னர் இது கோயிலா? சுற்றுச்சுவரா? என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

MAMALLAPURAM, ANCIENT TEMPLE STONEWARE, மாமல்லபுரம், மாமல்லபுரம் கடல்

மற்ற செய்திகள்