'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'?... துயரத்திற்கு மேல் துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தட்ப வெட்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் மனிதர்களுக்கே திரும்புகிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'?... துயரத்திற்கு மேல் துயரம்!

மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம், கொக்கிலமேடு கடற்கரை பகுதியில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் கடற்கரை முழுவதும் படிந்து கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இது 2 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தாது மணல் குவியலே கரைப்பகுதியில் நிரம்பிக் காணப்படுகிறது. மே, ஜூன் மாதத்தில் மலைகள், பாறைகள், சமவெளிகளைக் கடந்து கடலில் தாது மணல் அடித்து வரப்படும்போது கடலின் நிறமும் கறுப்பு நிறமாக மாறிவிடும்.

இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்கம் என்பதும் இருக்காது. தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நீரோட்டத்துடன் தாது மணல் அடித்து வரும் காரணத்தால் வலை வீசியும் மீன் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.

ஒரு புறம் கொரோனவால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்ப வெப்ப நிலை மற்றும் சுழற்று சூழல் மாறுதல் காரணமாக மீன் வளம் இல்லாமல் போயுள்ளது, மீனவர்களின் வாழ்க்கையை மேலும் துயரத்திற்குத் தள்ளியுள்ளது.

மற்ற செய்திகள்