கோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிபிஎம் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதற்கு மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

கோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..?

மாலை 5 மணி நிலவரப்படி சிபிஎம் வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகள் 401083. பாஜகாவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 273821. மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் பெற்ற வாக்குகள் 103814. இதேபோல பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இளம் வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களை கவர்ந்துள்ள இக்கட்சி பாஜகாவின் வாக்குகளைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலைச் சந்தித்த இக்கட்சி கோவையில் அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. சில இடங்களில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த 3-வது இடத்தில் உள்ளது.

LOKSABHAELECTIONRESULTS2019, ELECTIONRESULTS2019, VOTECOUNTING