மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!.. தனித்து போட்டியா?.. கூட்டணியா?.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு இன்று தொடங்கியுள்ளது.
அதில், வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கே அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் நிதி திரட்ட வழிவகைகள், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்