"எனக்காக தனி விமானம் இப்போ வரும்",,.. நான் பிரதமரோட 'பாதுகாப்பு'க்கு போறேன்,,." - மதுரை விமான நிலையம் வந்த 'இளைஞர்'... அவரோட 'பேக்'குள்ள,,.. பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரது கையில் ஒரு ஏர் கன்னும், தான் வைத்திருந்த பையில் மூன்று ஏர் கன்களும், நான்கு செல்போன்களும் இருப்பதைக் கண்டு அந்த இளைஞரை உடனடியாக வீரர்கள் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர், தான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலனாக செல்லவுள்ளதாகவும், டெல்லிக்கு தன்னை அழைத்துச் செல்ல தனி விமானம் ஒன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 1000 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள தன்னை தொடக் கூட முடியாது என்றும், புதிதாக வங்கி தொடங்கி விவசாயிகளுக்கு கடன் கொடுத்து உதவி செய்வேன் என்றும், நாட்டு நலனுக்காக போராடும் 'ஸ்லீப்பர்' செல் என்றும் சம்மந்தமில்லாமல் ஏதேதோ பேசியுள்ளார்.
அந்த வாலிபர் கொண்டு வந்திருந்த 4 ஏர் கன் மற்றும் 4 செல்போன்களை பெருங்குடி போலீசாரிடம் பாதுகாப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள வெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் தான் அந்த இளைஞர் என்பது தெரிய வந்தது. மேலும், பட்டதாரி இளைஞரான இவர், கல்லூரியில் என்.சி.சியில் இருந்துள்ளார். திடீரென மனநலம் பாதித்த நிலையில், அவர் மதுரை விமான நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அந்த இளைஞரின் தந்தையை அழைத்த போலீசார், அவரிடம் எச்சரித்து மகனை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையம் அருகே சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்