'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உசிலம்பட்டியை சேர்ந்த இளம் பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம் பெண் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். அவருக்கு இடை விடாத இருமல், சளி தொந்தரவு ஏற்பட தனது ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பும் அந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்ததால், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து இளம்பெண்ணை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. நுரையீரல் நோய் தடுப்பு மருத்துவர்கள் அந்த பெண்ணை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த பெண்ணின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கும் அந்த பெண்ணிற்கு, கொரோனா தாக்குதல் அறிகுறி இருந்தால் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

MADURAI, HOSPITAL, CORONA VIRUS