அப்பாவி பெண்ணின் பணத்துடன் ஓட்டம் பிடித்த திருடர்கள்.. சரியான நேரத்துல ஸ்பாட்க்கு வந்த போலீஸ்.. திக்.. திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பூ விற்பனை செய்துகொண்டிருந்த பெண்மணியிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு ஓடியதாக சொல்லப்படும் வாலிபர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்த சம்பவம் மதுரையையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "அவரு இங்கிலாந்து பிரதமர் இல்ல".. Throwback படத்தை பகிர்ந்து பங்கமாக கலாய்த்த அசாருதீன்..!
தமிழகத்தில் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது மதுரை மாநகரம். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மதுரையில் பூ விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்ததாக சொல்லப்படும் வாலிபர்களை காவல்துறையினர் உடனடியாக மடக்கிப் பிடித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள டவுன்ஹால் சாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அங்கே பூ விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் நைசாக பேச்சு கொடுத்திருக்கின்றனர். பூ விலை பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு ஓடியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உதவி கேட்டு சத்தம் எழுப்பியுள்ளார். பூ விற்பனை செய்யும் பெண் திடீரென கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்க்க ஒரு இளைஞர் வேகமாக ஓடி சாலையை கடந்து இருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திடீர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சம்பவத்தை நேரில் பார்த்திருக்கின்றனர். இதனால் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கி ஓடிய அந்த அதிகாரிகள் இளைஞரை வசமாக மடக்கிப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணப்பையை அந்த பெண்ணிடமே காவல்துறையினர் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த தீர செயலில் ஈடுபட்ட திடீர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்ததோடு அவர்களை பாராட்டவும் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் பூ விற்கும் பெண்மணியிடம் இருந்து பணப் பையை திருடியதாக சொல்லப்படும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா மற்றும் அருண் ஆகிய இருவரையும் திடீர் நகர் காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பணப்பையுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்களை காவல்துறை அதிகாரிகளே விரட்டிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்