"போடுற பால் எல்லாம் சிக்ஸர் அடிச்சு தூள் கெளப்புறீங்க"... அப்படியே எங்களுக்கும் ஒரு சான்ஸ் 'குடுத்தீங்க'ன்னா... 'நித்தி'க்கு லெட்டர் போட்ட 'நபர்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கைலாசா என்கிற நாட்டை உருவாகியுள்ளதாக நித்தியானந்தா கூறி வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கைலாசா நாட்டிற்கான நாணயங்களை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

"போடுற பால் எல்லாம் சிக்ஸர் அடிச்சு தூள் கெளப்புறீங்க"... அப்படியே எங்களுக்கும் ஒரு சான்ஸ் 'குடுத்தீங்க'ன்னா... 'நித்தி'க்கு லெட்டர் போட்ட 'நபர்'!!!

அதன்படி, விநாயகர் சதுர்த்தி நாளன்று நித்தியானந்தா, தான் கூறியபடியே நாணயங்களை வெளியிட்டுள்ளார். கைலாசா எங்கு இருக்கிறது என்பதும், நாணயங்கள் எங்கெங்கு செல்லும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், மதுரையில் புகழ்பெற்ற டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் சங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தாங்கள் சொன்னது போலவே கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கான நாணயத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். தாங்கள் எப்படி பக்தர்களை ஈர்க்கும் புதிய புதிய உத்திகளை கையாளுகிறீர்களோ, அதே போல நாங்களும் கொரோனா தோசை, மாஸ்க் பரோட்டா என பல புதிய உத்திகளை கையாண்டு வருகிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'எங்களது ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க அனுமதி தர வேண்டும் என்றும், உங்களது முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்று நெட்டிசன்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்