'போன தடவ கரண்ட் பில் 260 ரூபாய் தான் வந்துச்சு...' இந்த மாசம் 'எவ்ளோ' வந்துருக்கு...? - அதிர்ச்சியில் உறைந்த 'வாடகை' வீட்டுக்காரர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவில் ஒன்றரை ஆண்டாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ரியாஸ். கல்வி ஆலோசகராக பணியாற்றி வரும் இவருக்கு கடந்த ஜூலை மாதம் மின் கட்டணமாக ரூ.11,352 வந்துள்ளது.

'போன தடவ கரண்ட் பில் 260 ரூபாய் தான் வந்துச்சு...' இந்த மாசம் 'எவ்ளோ' வந்துருக்கு...? - அதிர்ச்சியில் உறைந்த 'வாடகை' வீட்டுக்காரர்...!

இதனால் அதிர்ச்சியடைந்த ரியாஸ் மற்றும் அவரின் குடும்பத்தார் தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ரியாஸ் கூறுகையில், 'நான் உயர் கல்வி கற்க நினைக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறேன். இதன் மூலம் எனக்கு மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள்தான் வருகிறது.

இந்த கொரோனா ஊரடங்கால் எங்களின் குடும்பமும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.680 கட்டணமும், மே மாதத்திற்கு ரூ.260 கட்டணமும் செலுத்தினேன்.

ஆனால் இந்த ஜூலை மாதத்தில் எனக்கு ரூ.11,352 கட்டணமும், டெபாசிட் தொகை ரூ.390 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது' என கூறியுள்ளார்.

அதோடு, தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கேட்டாலும் சரியான பதில் தர மறுப்பதாகவும், மின்வாரிய உயரதிகாரிகளுக்கு ஆன்லைனில் புகார் தெரிவித்து 4 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.

மேலும், 'என்னுடைய இந்த நிலை குறித்து தமிழக அரசின் மின்னகத்திற்கும், மின்சாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளேன். மின் மீட்டரில் தவறா, கணக்கீட்டில் தவறா எனத் தெரியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும்' என ரியாஸ் கூறியுள்ளார்.

அதோடு, தெப்பக்குளம் மின்நிலைய உதவிப் பொறியாளர் வடிவேல்குமார் அவர்கள் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, 'இந்த கொரோனா காலத்தில் மின் கணக்கீட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்துள்ளன. ரியாஸ் அவர்களுக்கு நடந்த சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டரில் குறைபாடு இருந்தாலும் சரி செய்து தரப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்