‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கிடைத்த பெருமை’... ‘மகிழ்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாட்டிலேயே இரண்டாவது தூய்மையான புனிதத்தலமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியாக இந்தியா முழுவதும் உள்ள புனித தலங்ளைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பத்து சிறந்த தலங்களில், 2-வது சிறந்த தலமாக மீனாட்சி அம்மன் கோவிலை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனிடம் இதற்கான விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து விசாகன் தெரிவிக்கையில், ‘கோயிலின் சுற்றளவில் தூய்மையை உறுதிப்படுத்த, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வளாகத்தின் தூய்மையை உறுதி செய்வதற்காக, அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் உள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சோதனைகள் நடத்தப்பட்டன, கோயிலைச் சுற்றி 100 சதவிகித பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உறுதி செய்ய, விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது’ என்று கூறினார்.