'அப்ப விரட்டியடிச்சாங்க!'.. 'வீட்டு வேலைக்காக பெண் வேடமிட்டு வேலைக்கு போகும் நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்ப கஷ்டம் காரணமாக, திரைப்படத்தில் வருவதுபோல், நிஜமாகவே ஆண் நபர் ஒருவர், பெண் வேடமிட்டு வீட்டு வேலைக்குச் சென்ற சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

'அப்ப விரட்டியடிச்சாங்க!'.. 'வீட்டு வேலைக்காக பெண் வேடமிட்டு வேலைக்கு போகும் நபர்!

மானாமதுரை மலையனேந்தலையை சேர்ந்த ராஜாதான் வயதான தன் பெற்றோரை காப்பாற்றுவதற்காக தன்னை ராஜாத்தியாக மாற்றிக்கொண்டு, அதாவது பெண் வேடமிட்டுக் கொண்டு, இந்த 40 வயதிலும் திருமணம் செய்யாமல் வீட்டு வேலைகளுக்குச் சென்று வருகிறார்.

கிராமத்தில் இருந்து தினமும் பேருந்து மூலம் மதுரை வரும் ராஜா, லுங்கி சட்டையுடன் வந்து, ஒரு மறைவான இடத்திற்கு சென்று மேக்கப் போட்டுக்கொண்டும், நீண்ட தலைமுடியுடன் கூடிய விக் அணிந்துகொண்டும், சேலை கட்டிக் கொண்டும் ராஜாத்தியாக மாறி வேலைக்குச் செல்கிறார்.

தொடக்கத்தில் இயல்பாக வேலை தேடியபோது விரட்டியடிக்கப் பட்டதால், மனம் வெதும்பிய ராஜா, 6 மாதங்களுக்கு முன் இந்த ஐடியாவை வொர்க்-அவுட் பண்ண ஆரம்பித்து, தற்போது 3 வீடுகளில் வேலை செய்து சம்பாதிக்கிறார்.  என்னதான் தாய், தகப்பனை காப்பாற்ற இந்த முயற்சியை, ராஜா எடுத்திருந்தாலும், ஆண்களுக்கு வேலையே கிடைக்காது என்பதுபோல், ராஜா செய்யும் இந்த ஆள்மாறாட்ட மோசடி குற்றச் செயல் என்று போலீஸார் அவரை எச்சரித்துள்ளனர்.

MADURAI, HOUSEMAID