'ஆசை ஆசையாகப் பிறந்த கடைக்குட்டி மகன்'... 'எதிர்பாராமல் நடந்த துயரம்'... நெகிழ வைத்த தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆசை ஆசையாகப் பிறந்த மகன் எதிர்பாராமல் உயிரிழந்த நிலையில், அவரின் நினைவு நாளில் மகனுக்குச் சிலை வைத்த தந்தையின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'ஆசை ஆசையாகப் பிறந்த கடைக்குட்டி மகன்'... 'எதிர்பாராமல் நடந்த துயரம்'... நெகிழ வைத்த தந்தை!

மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் - சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரி கணேஷ். கடைக்குட்டியாக மாரி கணேஷ் பிறந்த நிலையில் அவர் மீது, தந்தை முருகேசன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரி கணேஷ் மீது அவரது இரண்டு சகோதரிகளும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள்.

இதனிடையே புல்லட் பைக் மீது மாரி கணேஷிற்கு அலாதி பிரியம் இருந்து வந்தது. இதனால் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரி கணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரி கணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார். ஆசை மகனின் எதிர்பாராத மரணம், அவரது பெற்றோர் மற்றும் மாரி கணேஷின் சகோதரிகளைப் பேரதிர்ச்சியை ஆழ்த்தியது.

இந்த நிலையில், மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார். மாரிகணேஷின் உருவச் சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். உடல்நலக் குறைவால் இறந்த தனது மகனுக்கு சுமார் 6 லட்சம் செலவில், 6 அடிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செலுத்திய தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்