'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் பழைய நண்பர் என கூறி போலியான பேஸ்புக் ஐடி மூலம் 2,70,000 ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீஸ் தேடிவருகின்றனர்.

'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெயக்குமார் ராமசாமி என்ற பெயரில் அறிமுகமான மர்மநபர் ஒருவர் தன்னை பழைய நண்பர் என கூறி பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருப்பதாக கூறி முதல்கட்டமாக 3500 ரூபாய் பணம் உதவி கோரியுள்ளார்,

அதனை நம்பி கூகுள் பே மூலம் ஜெயக்குமார் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார் சீனிவாசன். தொடர்ந்து ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பல காரணங்களை கூறி, நெருங்கிய நண்பன் என்ற பெயரில் சீனிவாசனிடம் இருந்து மர்ம நபர் சுமார் 2,70,000 ரூபாய் அளவிற்கு பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில், சந்தேகமடைந்த சீனிவாசன் மற்ற நண்பர் முலம் விசாரித்த போது தனது நண்பன் பெயரில் போலியான பேஸ்புக் ஐடி மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சீனிவாசன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

 

மற்ற செய்திகள்