'வெளிய வரட்டும்.. பாத்துக்கலாம்'.. போலீஸ் தேர்வை எழுதிய திருடனுக்கு நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலீஸ் தேர்வை எழுதக் கூடியவர்களின் மனநிலை பெரும்பாலும்ன் நேர்மையாகவும் துடிப்பாகவும் இருக்கக் கூடியதாக இருக்கும்.

'வெளிய வரட்டும்.. பாத்துக்கலாம்'.. போலீஸ் தேர்வை எழுதிய திருடனுக்கு நடந்த சம்பவம்!

ஆனால் மதுரையில் போலீஸ் தேர்வை எழுத வந்த வழிப்பறி கொள்ளையன் ஒருவன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி மையம் ஒன்றிற்கு பல ஊர்களில் இருந்தும் பலர் தேர்வு எழுத வந்தார்கள்.

தேர்வு முடிந்ததும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்த போது, ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து, போலீஸார் தயாராக இருந்த வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அந்த வாலிபரை போலீஸார் எதற்காக அழைத்துச் சென்றார்கள் என தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்ட அந்த நபர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த 22 வயதான விஜயகாந்த் என்பதும், அவரும் மற்றொருவரும் இணைந்து வழிப்பறி, நகை பறிப்பு மற்றும் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டவர் என்பதனால் அவரை ட்ரேஸ் செய்து கைது செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் தேர்வறையில் இருந்த விஜயகாந்த், தேர்வு எழுதி முடிக்கட்டும் என்று காத்திருந்த போலீஸார், தேர்வு முடிந்து அவர் வெளியே வந்ததும், சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

EXAM, POLICE, MADURAI