“இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா?.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்!”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம் தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவில், இம்ப்ரோ சித்த மருந்து பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து அதற்குரிய அறிக்கையை ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பத்துள்ள இந்த உத்தரவில், மேற்கூறிய மருந்துகளை ஆய்வு செய்து, கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்பதை ஆராய்ந்து, சாதாரண மனிதர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய மருந்துகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ள நீதிமன்றம், போதிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்