"'Exams' எல்லாம் இப்டி தான் நடக்கப் போகுது.." - அதிரடி 'அறிவிப்பு' வெளியிட்ட 'பல்கலைக்கழகம்'... "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என..." வியந்து நிற்கும் 'மாணவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
சில பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பல மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வசதி இல்லாமல் உள்ளது. இதனிடையே, சென்னை பல்கலைக்கழகம் (Madras University) அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை பல்கலைகழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் காலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான கேள்விகள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படலாம் என்றும் 90 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடையை ஏ4 தாள்களில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் மானியக்குழு பரிந்துரையின் படி, சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்