‘லாபத்துக்காக எக்ஸ்ட்ரா டியூஷன் எடுக்குற அரசுப்பள்ளி ஆசிரியர்களை..’ ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் என்பவரை, தலைமை ஆசிரியர் மல்லிகா என்பவரின் கோரிக்கையை ஏற்று, அம்மாநகராட்சி ஆணையர், அப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள செல்வபுரம் பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

‘லாபத்துக்காக எக்ஸ்ட்ரா டியூஷன் எடுக்குற அரசுப்பள்ளி ஆசிரியர்களை..’ ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி ரங்கநாதன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 2 கிமீ தூரத்தில் இருக்கும் இடமாறுதல் ஒரு பொருட்டல்ல என்று ரங்கநாதன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாது, அரசை மிரட்டும் வகையில் பல போராட்டங்களை நடத்தும் ஆசிரியர்கள் நியாயமான ஊதியம் பெறும் பட்சத்தில் கூட, சொந்த லாபத்துக்காக தனியாக டியூஷன் எடுப்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்கவு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் சமீப காலங்களாக நடந்துவரும் ஒழுங்கின்மை, சட்டவிரோத செயல்கள், பாலியல் கொடுமைகளோடு, கட்டாயமாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீதும் புகார் அளிக்கும் வகையில் சிறப்பு கட்டணமில்லா தொலைபேசி எண்களை 8 வாரங்களுக்குள் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MADRASHIGHCOURT, TEACHER