‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடாளுமன்றத் தேர்தல் வேலூர் தொகுதியில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னதாக அதே தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முறைகேடாக பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது. ஆனால் கதிர் ஆனந்த், தனக்கும் சீனிவாசன் என்பவரது வீட்டில் நிகழ்ந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கியுள்ளார். இந்த நிலையில் வேலூரில் தேர்தல் ரத்தானதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடுத்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் சம்மந்தப்பட்ட வேட்பாளரை மட்டுமே தகுதி நீக்கம் செய்யுமாறும், ஒருவர் செய்கிற தவறால் ஒரு தொகுதிக்கே தேர்தல் ரத்து செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டுருந்துள்ளார்.

ஆனால், "தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்பவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?" என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதிநீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்த இந்த வாதத்தில்,தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாவதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம் என்றும், வேலூர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. 

எனினும், தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று கூறிய உயர்நீதிமன்றம் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

MADRASHIGHCOURT, LOKSABHAELECTIONS2019, VELLORE, ACSHANMUGAM