வனப்பகுதியில்... சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி... ஈரோடு அருகே பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு அருகே வனப்பகுதியில் இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியில்... சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி... ஈரோடு அருகே பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்திற்கு அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெருந்துறை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம் ஜோடியின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த நிலையில் இருந்த காதல் ஜோடிகளின் அருகே பை ஒன்று இருந்துள்ளது. அதனை போலீசார் சோதனையிட்டதில், உயிரிழந்த இளம்பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்தது. இளைஞர் குறித்த விவரம் எதுவும் தெரியவராததால், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம் காதல் ஜோடி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு  ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

ERODE, PERUNDURAI, SUICIDE