'கர்ப்பிணி' காதலிக்கு... 'யூ ட்யூப்' பார்த்து காட்டுப்பகுதியில் 'பிரசவம்' பார்த்த 'காதலன்'... 'பிரசவத்தின்' போது நிகழ்ந்த 'விபரீதம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலித்த பெண்ணின் கர்ப்பம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க, 8வது மாதத்திலேயே, யூட்யூப் பார்த்து காட்டுப் பகுதியில் பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சௌந்தர் என்பவருக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் மிக நெருக்கமாக பழகியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தை மறைத்து வந்த பெண், இனிமேல் மறைக்க முடியாது எனக் கூறவே, 8 மாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு காதலனே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து யூ ட்யூபை பார்த்து காட்டுப்பகுதியில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் கை பகுதி மட்டும் தனியாக முதலில் வந்திருக்கிறது.
இதையடுத்து இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளார் செளந்தர்.
அங்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தாகக் கூறி, பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை இராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக் காதலை மறைப்பதற்காக இதுபோன்று விபரீதமாக பிரசவம் பார்த்து, குழந்தை உயிரிழக்கக் காரணமான செளந்தரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.