VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தியதில் காதல் ஜோடி ஒன்று புதருக்குள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களை சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்தும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். குறிப்பாக தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் வழக்கமாக ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தியபோது காதல் ஜோடி ஒன்று காட்டுக்குள் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலமாக போலீசார் கண்டுபிடித்தனர். இதைப் பார்த்த அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.