'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மெரினா கடற்கரைக்குச் செல்லும் காமராஜ் சாலையின் அருகே வந்த லாரி ஒன்று, வெகுவேகமாக வந்ததால் அந்த லாரிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மாருதி காரை இடித்துத் தள்ளியுள்ளது. லாரி தனது பின்னால் இடித்ததில், சாலையிலேயே அந்த மாருதி கார் கரகரவென்று சுற்றியுள்ளது.

'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்!

அதன் பின்னர் அந்த கார், தனக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த இன்னொரு ஸ்விஃப்ட் காரை இடித்துள்ளது. அந்த கார் அங்கிருந்து அருகில் இருந்த சாலைமுனை சுவற்றில் சென்று இடித்து நின்றுள்ளது. இதற்கிடையில் மாட்டிய மாருதி காரின் நிலைதான் கவலைக்கிடமாக இருந்திருக்கும் என்று நினைத்து அந்த இடமே பரபரப்பானது.

ஆனால் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, அந்த மாருதி கார், லாரியால் இடிக்கப்பட்டு, சாலையிலேயே சுற்றுச் சுற்று என்று சுற்றியது. அப்போது, அந்த காரை இயக்கி வந்தவர், சீட் பெல்ட்டை மாட்டியிருந்ததால், அத்தனை சுற்றுக்கும் கூட அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் நல்லவேளையாக சீட் பெல்ட்டை அணிந்திருந்ததாக அனைவரும் நிம்மதியுற்றனர்.

அதன் பிறகும் ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து, இதே லாரி டிரைவரை அடிக்க முற்பட்டுள்ளனர். விசாரித்ததில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி அருகே இந்த லாரி வரும்போது, அவர்களை இடித்து கீழே தள்ளாத குறைதானாம். அதனால் அவர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளதாகக் கூறியதோடு, அப்போதே இந்த லாரி டிரைவர் யாரையாவது இடித்துத் தள்ளப் போகிறார் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளனர். பின்னர் போலீஸார் அந்த லாரி டிரைவரை கைது செய்து உடற் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

ACCIDENT, CHENNAI