நான் ஜெயில்ல இருந்தப்ப 'துரோகம்' பண்ணிட்டா... அதான் 'அவனோட' கையை வெட்டி கிஃப்டா குடுத்தேன்... தனியார் நிறுவன ஊழியர் 'கொலை'யில் புதிய தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஜெயில்ல இருந்தப்ப 'துரோகம்' பண்ணிட்டா... அதான் 'அவனோட' கையை வெட்டி கிஃப்டா குடுத்தேன்... தனியார் நிறுவன ஊழியர் 'கொலை'யில் புதிய தகவல்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை சாலையில் ஒரு சுடுகாட்டில் கை தனியாக துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் முன்பு கிடந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி ராணிப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் தமிழரசன்(35) என்பவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் கிருஷ்ணகிரியில் இருந்தபோது எனக்கும், அங்குள்ள பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். என்மேல் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. அதற்காக நான் சிறைக்கு சென்றபோது என் மனைவி கர்ப்பமான விஷயம் தெரிய வந்தது. இதற்கு பாலசுப்பிரமணி தான் காரணம் என்பது எனக்கு தெரிய வந்தது. என் மனைவியிடம் இந்த பழக்கத்தை விட்டுவிடும்படி கூறினேன். அவள் கேட்கவில்லை.

இதனால் மது குடிப்பது போல அழைத்துச்சென்று பாலசுப்பிரமணியனை கொலை செய்து அவரது கையை துண்டித்தேன். பின்னர் அதை  ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு நேராக என் மனைவியிடம் வந்து, உனக்கு பரிசாக உன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவனின் கையை வெட்டிக்கொண்டு வந்துள்ளேன். இனி நீ வேறு யாருடனும் தொடர்பு வைத்தால் அவர்களுக்கும் இதே கதிதான் என்று தெரிவித்துவிட்டு தலைமறைவாகி விட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து தற்போது சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்துள்ளனர்.  

TRENDING NEWS

மற்ற செய்திகள்