Bharathi Kannamma : "ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்.. மன்னிப்பாயா?".. பரமசிவனிடம் மன்றாடிய பார்வதி.! பாரதி கண்ணம்மாவில் ஒளிபரப்பான வைரல் நாடகம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்பட்டுவிட்டது.

Bharathi Kannamma : "ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்.. மன்னிப்பாயா?".. பரமசிவனிடம் மன்றாடிய பார்வதி.! பாரதி கண்ணம்மாவில் ஒளிபரப்பான வைரல் நாடகம்.!

எனினும் குழந்தைகள் விருப்பப்பட்டால் பாரதியை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பாரதியும் கண்ணம்மாவையும் குழந்தைகளையும் மனமாற்றம் செய்ய, அவர்களின் ஊருக்கு சென்றுவிட்டார். கிராமத்தில் நடக்கும் தற்போதைய எபிசோடுகளில் பாரதி கண்ணம்மாவை பல வழிகளில் சந்தித்தும் பேசியும் சமாதானம் பண்ணியும் வருகிறார். அதன் ஒரு அங்கமாக அந்த ஏரியா மக்களிடையே நட்பாக பழகி அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவ முகாம் போடுவது உள்ளிட்டவற்றின் மூலம் கண்ணம்மாவை சந்திப்பதற்கும் பேசுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார் பாரதி.

Lord Shiva Shakthi Drama in Bharathi Kannamma Serial

இதனிடையே லட்சுமி பாரதிக்கு தன்னுடைய ஆதரவுக் கரத்தை நீட்டி விட்டார். இதனால் பாரதி டபுள் மடங்கு எனர்ஜியுடன் கண்ணம்மாவை அவ்வப்போது காதலாக வம்பிழுத்து வருகிறார்.  இந்த நிலையில்தான் இதன் ஒரு அங்கமாக பரமசிவன் - பார்வதி திருவிளையாடலான சிவன் - சக்தி சண்டையை நாடகமாக போடுகிறார் பாரதி. இதில் குழந்தை லட்சுமி முருகர் வேடம் ஏற்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, சிவன் சொல்லியும் பார்வதி கேட்காமல் யாகத்துக்கு செல்ல, இதனால் சிவன் கோபித்துக்கொள்ளும் அதே கதை ஆங்கிலம் கலந்து காமெடியாகவும் சீரியஸாகவும் நாடகமாக அரங்கேறியது. இதற்கென வேறு நடிகர்கள் சிவன் - பார்வதியாக நடித்துள்ளனர்.

Lord Shiva Shakthi Drama in Bharathi Kannamma Serial

இதில் பல தற்கால பாடல்கள் பின்னணியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. உதாரணமாக சிவன் - பார்வதி இருவரும், ‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே’ பாடலுக்கு ரொமான்ஸ் செய்தனர், பின்னர்  பார்வதி பிரிந்து போனதும், சிவன் ‘போ நீ போ. தனியாக தவிக்கின்றேன்’ மோடுக்கு போனார். அதன் பின்னர், கோவப்பட்ட சிவன் ‘ஓம் சிவோகம்’ பாடலுக்கு வைப் ஆனார்.

Lord Shiva Shakthi Drama in Bharathi Kannamma Serial

அதன் பின்னர்,  ‘ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்.. மன்னிப்பாயா?’ என பாடி சிவனிடம் பார்வதி மன்றாடுகிறார். இறுதியில் ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ பாடலில் இருவரும் ஜோராக காட்சி அளிக்கின்றனர். இந்த நாடகம் பாரதி கண்ணம்மா பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

BHARATHI KANNAMMA, BHARATHI KANNAMMA TODAY, BHARATHI KANNAMMA SERIAL TODAY

மற்ற செய்திகள்