17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (23/05/2019) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுகவின், பொதுச் செயலாளராக இருந்த-மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து, தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக இருக்கும் பன்னீர் செல்வமும் அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகானதொரு சூழ்நிலையில் நடந்த அதிமுக சந்தித்த முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் என்று இதனைச் சொல்லலாம். ஆனால் இந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அதாவது, பாஜக, தேமுதிக,புதிய தமிழகம், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதிமுக இந்தத் தேர்தலை சந்தித்தது. எனினும் மொத்தமுமுள்ள 39 இடங்களில், 1 இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, அதிமுகவின் தொண்டர்கள், மற்றும் அரசியல் வல்லுநர்கள் சிலர் ஜெயலலிதாவின் இல்லாமைதான், அதிமுகவிற்கு இந்த கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மேலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
தொகுதி வேட்பாளர் நிலவரம்
தேனி ரவீந்திரநாத்குமார் வெற்றி