'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்17-வது மக்களவைத் தொகுதித் தேர்தலின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று தெரியவந்ததை தமிழ்நாட்டில் நடந்த மாற்றமும், மத்தியில் மீண்டும் ஆளும் கட்சியே அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதுவும் மட்டுமே எங்கும் பேசப்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை வேலூர் நீங்கலாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களையும் சேர்த்து 39 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக அபாராமாக முன்னிலை பெற்று அந்த தொகுதிகளைக் கைப்பற்றியது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட
அதிமுகவைப் பொருத்தவரை 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் (ஓ. பன்னீர் செல்வத்தின் மகன்) 4 லட்சத்து 27 ஆயிரத்து 330 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதே தொகுதியில் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக), ஷாகுல் ஹமீது (நா.த.க), ராதாகிருஷ்ணன் (ம.நீ.ம) ஆகியோரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.