'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த கடினமான நேரத்தில், ராமநாதபுரத்தில் கர்ப்பிணிக்கு காவல்துறையினர் செய்த உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் தங்களது அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை நாடி வருகிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரத்தில் நடந்துள்ள நிகழ்வு குறித்து இளைஞர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவு மூலமாகத் தெரிவித்துள்ளார்.
அருண்குமார் என்ற இளைஞர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், 'தனது மச்சானின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் , உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறியதாக அருண் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ், அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறியுள்ளார். இதையடுத்து உடனே ஒரு காரை அனுப்பிய எஸ்பி, அதில் வந்த காவல்துறை அதிகாரிகளே அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருண் குமார் (9489919722) கொடுத்துள்ள செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டதும், உடனடியாக கர்ப்பிணிக்கு உதவிய அவரின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
@RmdDistPolice காலையில் (20/04/2020) என் மாப்பிள்ளை போன் பன்னுனான் மச்சான் இராமநாதபுரம் GH க்கு என் மனைவியை(நிறைமாத கற்பிணி)அழைத்துச்செல்லனும் என்று சொன்னான். நான் உயர்மிகு @VarunKumarIPSTN அவர்களிடம் உதவி கேட்டேன் உடனே ஒரு காரில் காவல்துறை அதிகாரிகளே அழைத்துச்சென்றார் மிக நன்றி. pic.twitter.com/IDy8z5bcZ9
— அருண்குமார்(𝔸𝕣𝕦𝕟𝕜𝕦𝕞𝕒𝕣) (@arunkum02813466) April 20, 2020
தாயை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் 🙏🏼
— Varun Kumar IPS (@VarunKumarIPSTN) April 20, 2020