BREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'?... அரசின் விரிவான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து தமிழக உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10ஆயிரத்திற்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. சென்னையைப் பொறுத்தவரைக் காய்கறி, மளிகைக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு.
பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10ஆயிரத்திற்குக் குறைவான வருமானம் கொண்ட கோவில்கள், தேவாலயம், மசூதிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்கிற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் நோய்கட்குப்பாட்டுப் பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும். ரயில் விமானப்போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் ஈ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்.
மேலும் பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை. மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும். அதேபோன்று திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் பேருந்து போக்குவரத்திற்குத் தடை தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்