“பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

“பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!

பிப். 8-ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முக்கியமாக இதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்.8 முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இனிமேல் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. 

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்படவும், 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி அனைத்து திரையரங்குகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்களில் 100% இருக்கை தொடர்பாக வெளியான 'மத்திய அரசின் ‘முக்கிய’ அறிவிப்பு!

இதேபோல் கண்காட்சிக் கூடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டதுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50% இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்