கருவாட்டுக்கு வந்த 'திடீர்' கிராக்கி ... சர்ரென 'எகிறிய' விலை... என்ன காரணம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அசைவ பிரியர்களின் கவனம் தற்போது கருவாட்டின் மீது திரும்பியுள்ளது.
கொரோனா காரணமாக தற்போது இந்தியா முழுவதும் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வருகின்ற 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை திகழ்வதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முக்கிய மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கூடங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் முட்டை மட்டுமே அசைவ பிரியர்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களின் கவனம் தற்போது கருவாட்டின் பக்கம் திரும்பி இருக்கிறது.
இதனால் கருவாட்டை தேடி சிறிய கடைகள் மற்றும் மளிகை கடைகளுக்கு அசைவ விரும்பிகள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த திடீர் கிராக்கியால் கருவாட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதுதவிர ரூபாய் 10 வரையில் விற்பனையாகி வந்த கருவாடு பாக்கெட்டுகளின் விலை ரூபாய் 20 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற செய்திகள்