'ஈசிஆர் ரோட்டில்' வந்த 'நடிகை ரம்யாகிருஷ்ணனின்' கார்... 'போலீசார்' மடக்கி 'சோதனையிட்டதில் அதிர்ச்சி ...' 'டிரைவர் கைது...' 'திரைத்துறை' வட்டாரத்தில் 'பரபரப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நடிகையான ரம்யாகிருஷ்ணன் காரில் கடத்திவரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே நடிகை ரம்யாகிருஷ்ணனின் காரில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தொடர்பாக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், கானத்தூர் அருகே முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே நடிகை ரம்யாகிருஷ்ணனின் இன்னோவா சொகுசு கார் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கி சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது, காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த டிரைவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து பிகைண்ட்வுட்ஸ் சார்பில் கானத்தூர் காவல்நிலையத்தில் விசாரித்தபோது, நடிகையின் காரில் , 96 பீர் பாட்டில்கள், 3 பிளாக் லேபிள், 3 பிளாக் லேபிள் ரெட் மது பாட்டில்கள் உட்பட 104 மதுபாட்டில்கள் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தமிழ் திரைப்படத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS