பார்க்க ‘பூனை’ மாதிரி இருக்கேன்னு விரட்டுனேன்.. கடைசியிலதான் உண்மை தெரிஞ்சது.. அதிர்ந்துபோன டீக்கடைக்காரர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டீ கடைக்குள் புகுந்த பூனையை விரட்டியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

பார்க்க ‘பூனை’ மாதிரி இருக்கேன்னு விரட்டுனேன்.. கடைசியிலதான் உண்மை தெரிஞ்சது.. அதிர்ந்துபோன டீக்கடைக்காரர்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு வனப்பகுதியில் இருந்து சிறிய பூனைக்குட்டி ஒன்று கடைக்குள் புகுந்துள்ளது. முதலில் அதனை சாதாரண பூனைதான் என எண்ணி டீக்கடைக்காரர் விரட்டியுள்ளார்.

ஆனால் விரட்டியதும் அப்பூனை அவரை தாக்க சீறிப்பாய்ந்துள்ளது. உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் டீக்கடைக்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். இதன்பின்னர் தான் அது பூனை இல்லை சிறுத்தைப் பூனை என்பது தெரியவந்துள்ளது.

Leopard kitten rescued at tea shop in coonoor

இதனை அடுத்து அந்த சிறுத்தைப் பூனையை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEOPARD, CAT, COONOOR

மற்ற செய்திகள்