டாஸ்மாக்குக்கு எதிராக 'ஒரே ஒரு கேள்விதான்'.. 'ஒரு வாரத்துல' கல்யாணம் ஆகப்போகும் மாணவிக்கு சிறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கும் அவரது தந்தைக்கும் சிறைக்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

டாஸ்மாக்குக்கு எதிராக 'ஒரே ஒரு கேள்விதான்'.. 'ஒரு வாரத்துல' கல்யாணம் ஆகப்போகும் மாணவிக்கு சிறை!

தமிழகத்தில் அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக்குக்கு எதிராக மாணவி நந்தினி போராடியதை அடுத்து, அவர் மீதும், அவருக்கு ஆதரவாக இருந்த அவரது தந்தை ஆனந்தன் மீதும் கடந்த 2014-ஆம் ஆண்டு, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. அதன் பின், நேற்றைய தினம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் வாதாடிய நந்தினி, ஐபிசி பிரிவு 328-ன் படி, டாஸ்மாக் மூலமாக போதைப்பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிக்கப்படுவது குற்றமில்லையா? என கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நந்தினியும் அவரது தந்தை ஆனந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய நந்தனி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பினை உண்டாக்கி வருகிறது.

NANDHINI, TASMAC, THIRUPATHUR