"எழுந்து வா லட்சுமி" 😭😭.. சமாதியில் கண்ணீர் விட்ட யானை பாகன் சக்திவேல்.. மனதை ரணமாக்கும் சோகம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஓய்வில் இருந்த யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்தது.
கடந்த 1996ம் ஆண்டு இக்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது. அண்மை காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தது. முன்னதாக லட்சுமி யானை வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுத்து வந்தது.
இந்த ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்களும் யானையை பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. தவிர பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்தன.
அப்படி ஒரு சூழலில் தான், நடை பயிற்சி சென்ற போது மயங்கி விழுந்து லட்சுமி யானை உயிரிழந்தது. இதற்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, லட்சுமி யானையின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சமாதியிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்படி ஒரு சூழலில், அதன் சமாதியில் யானை பாகன் கண்ணீர் சிந்துவது தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.
முன்னதாக லட்சுமி யானை இறப்பதற்கு முன்பாக பாகன் சக்திவேலை பிடித்து இழுத்து அவருடன் பாசப் பிணைப்பை காட்டும் வீடியோ ஒன்று வைரலானது. அதே போல, இறக்கும் தருவாயில், அதாவது மயங்கி விழுந்து இறக்கும் ஒரு நொடிக்கு முன்பாக கார் ஒன்றுக்கு பின்புறம் நின்றிருந்த லட்சுமி யானை பாகன் சக்திவேலின் கட்டளையை ஏற்று, அங்கிருந்து நகர்கிறது. இப்படி கடைசி நொடி வரை பாகன் சக்திவேலுடன் யானைக்கு இருந்த பிணைப்பு தொடர்பான விஷயம், பார்ப்போர் பலரையும் கண் கலங்க வைத்திருந்தது.
இதற்கு மத்தியில், யானை பாகன் சக்திவேல், லட்சுமி யானையின் சமாதி அருகே இருந்த படி, பிரிவை தாங்க முடியாமல் தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கிறார். எப்போதும் அருகே இருந்த யானை, தற்போது பிரிந்து சென்றதால் அதன் வேதனையை சக்திவேலால் கொஞ்சம் கூட தாங்கிக்க முடியவில்லை என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்