சென்னையில் திடீர்னு பிங்க் நிறத்தில் மாறிய ஏரி.. "அந்த தண்ணி கிட்ட போகாதீங்க"..எச்சரிக்கும் நிபுணர்கள்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஏரி ஒன்று திடீரென பிங்க் நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் திடீர்னு பிங்க் நிறத்தில் மாறிய ஏரி.. "அந்த தண்ணி கிட்ட போகாதீங்க"..எச்சரிக்கும் நிபுணர்கள்.!

பிங்க் ஏரி

சென்னை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ள ஏறி தற்போது பிங்க் நிறத்தில் மாறியுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பயணிகள் இந்த பிங்க் ஏரியை புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஏரி இப்படி நிறம் மாறியுள்ளது குறித்து சென்னை ஐஐடி -யில் பேராசிரியராக பணிபுரிந்துவரும் இந்துமதி ஆய்வில் இறங்கியுள்ளார்.

மேலும், சதுப்பு நிலங்களில் குறைவான ஆக்சிஜனுடன் உரம் உற்பத்தியாகையில் மீத்தேன் உருவாகும். அப்போது சயனோபாக்டீரியா மீத்தேனை உண்டு துரிதமாக வளர்வதால் நீர்நிலைகள் பிங்க் நிறத்திற்கு மாறும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

Lake in Perungudi turns bright pink in Colour

சயனோ பாக்டீரியா

பெருங்குடி ஏரி பிங்க் நிறத்தில் மாறியது குறித்து பேசிய சுற்றுச் சூழல் ஆர்வலரான நித்யானந் ஜெயராமன்," சயனோ பாக்டீரியா ஒரு மாசுபடுத்தி ஆகும் சதுப்பு நிலங்களில் நாம் குப்பையை கொட்டும்போது, குறைவான ஆக்சிஜன் துணையோடு உரங்கள் உற்பத்தியாகும். அந்த வேளைகளில் மீத்தேனை உறிஞ்சும் சயனோ பாக்டீரியா செழித்து வளரும். இது சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்" என்றார்.

நீர்நிலைகளில் சயனோ பாக்டீரியா வளர்வதால் பாசிகள் படர்ந்து, நீர்நிலையில் உள்ள ஆக்சிஜனின் அளவை குறைக்கும். இதன் காரணமாக நீர்நிலைகளில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கும் எனவும் எச்சரித்திருக்கின்றனர் சுற்றுச்குழல் ஆர்வலர்கள். பெருங்குடி ஏரி, நிறம் மாறியிருப்பதால் பொதுமக்கள் அதனை உபயோகிக்கவேண்டாம் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Lake in Perungudi turns bright pink in Colour

தீ விபத்து

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ளது அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயினை போராடி அணைத்தனர். இந்நிலையில், அதே பகுதியில் இருக்கும் ஏரி பிங்க் நிறத்தில் மாறியிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CHENNAI, PERUNGUDI, PINKLAKE, சென்னை, பிங்க்ஏரி, பெருங்குடி

மற்ற செய்திகள்