'நான் வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்'... 'நீ என்னவும் பண்ணிக்கோ'... 'விபரீத' முடிவெடுத்த 'பெண்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மதுரவாயல் அய்யாவு நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது தங்கை விக்னி நாக நந்தினி. நந்தினிக்கும், செந்தில்நாதன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. செந்தில்நாதன் கிண்டியிலுள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நந்தினியை அவரது மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் நகை வேண்டுமென கூறி வரதட்சணை கொடுமையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக நடைபெற்ற தகராறில் நந்தினியை வீட்டை விட்டு துரத்தவும் செய்துள்ளனர். இதுகுறித்து தனது கணவரிடம் கூறிய போது, 'எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் ஒரு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன், நீ எப்படி வேண்டுமானாலும் போ' என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நந்தினி, தற்கொலை செய்ய முடிவெடுத்து தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்த நிலையில், பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்துள்ளன. இதனையடுத்து, இதுகுறித்து நந்தினியின் சகோதரராரான நாகேந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முதற்கட்டமாக செந்தில்நாதனை கைது செய்தனர். இதையடுத்து, செந்தில்நாதனின் பெற்றோர்கள் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக நந்தினி மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவு சென்ற போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நந்தினிக்கு தந்தையில்லாத காரணத்தால் அவரது சகோதரர் நாகேந்திரன் முன்னின்று திருமணத்தை நடத்தினார்.
அப்போது செந்திலாந்தனுக்கு ஐந்து பவுனில் தங்கச்செயின் போடலாம் என நந்தினி வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக செயின் போடாத நிலையில், அதனைக் கேட்டு செந்தில்நாதனின் குடும்பத்தினர் நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தினி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதே போல தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காத நிலையில், செந்தில்நாதனுக்கு மெசேஜ் செய்து விட்டு மாடியிலிருந்து கீழே குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்