‘தமிழக’ பாஜகாவிற்கு புதிய ‘தலைவர்’ நியமனம்... பாஜக தலைவர் ‘ஜே.பி.நட்டா’ கொடுத்த ‘சர்பிரைஸ்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘தமிழக’ பாஜகாவிற்கு புதிய ‘தலைவர்’ நியமனம்... பாஜக தலைவர் ‘ஜே.பி.நட்டா’ கொடுத்த ‘சர்பிரைஸ்’...

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு தலைவர் பதவி காலியாக இருந்துவந்த நிலையில், பல மாதங்களாக புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சீனிவாசன், எஸ்.வி.சேகர் எனப் பலரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நியமனம் குறித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் டெல்லியில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.

BJP, NARENDRAMODI, JPNADDA, LMURUGAN, LEADER