இன்னும் எவ்வளவு 'டௌரி' வேணும்னாலும் வாங்கி தரேன்...! தயவுசெய்து 'கதவ' திறங்க...! 'என் கணவர் எனக்கு வேணும்...' - நடுரோட்டில் அழுது துடித்த வக்கீல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள திருத்துவபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி. இவரது கணவர் பெயர் ராஜ ஷெரின். இவர் திருமணத்தின் போது 101 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் 2 கோடி மதிப்பிலான சொத்து போன்றவற்றை வரதட்சணையாக பெற்றுள்ளார்.
திருமணம் முடிந்த பின்பு கணவர் ராஜ ஷெரின் மனைவி பிரியதர்ஷினியிடம் மேலும் அதிகமாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கணவரின் பெற்றோரும் சேர்ந்துக்கொண்டு பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பிறகு, சட்ட ஆலோசகர் அளித்த அறிவுரையின்படி இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், ராஜ ஷெரின் சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை ஒன்று தயாராக உள்ளது. முதலில் சென்னை சென்று வேலையில் சேர்ந்ததும் மனைவியை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு கிளம்பியுள்ளார். கிளம்பியவர் வீடு திரும்பவே இல்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை (22-07-2021) இரவு வீட்டுக்கு வந்த கணவர் ராஜ ஷெரின் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார், கணவரைத் தேடி அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் பிரியதர்ஷினி.
கணவன் ராஜ ஷெரின் மற்றும் அவரது பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து வழக்கறிஞர் பிரியதர்ஷினியை வீட்டிற்கு வெளியே தள்ளி கேட்டை பூட்டியுள்ளனர்.
மனம் நொந்துப்போன பிரியதர்ஷினி "எவ்வளவு வரதட்சணை வேண்டுமானாலும் மறுபடியும் வாங்கிக் கொண்டு வருகிறேன். என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் கேட்டை திறங்கள்" என வாசலில் நின்றுக்கொண்டு கதறியுள்ளார். ஆனால் அந்த வீடு திறக்கவே இல்லை. உடனடியாக சாலையில் அமர்ந்து அழுது புரண்டார்.
இந்த நிலையில் தக்கலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருடன் பிரச்சனை குறித்து விசாரித்தனர். அப்போது, நீதிபதி தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னை நீதிபதி ஆக விடக் கூடாது என்று தன் வீட்டார்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ராஜ ஷெரின் பின் வாசல் வழியாக தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், "எனது கணவர் எனக்கு வேண்டும். நான் அவரோட வாழணும்னு ஆசைப்படுறேன்" என காவல்துறையினரிடம் கண்ணீர் வடித்துள்ளார் பிரியதர்ஷினி. இந்த சம்பவம் காண்போரின் மனதை கனக்க செய்யும் விதமாக இருந்துள்ளது.
மற்ற செய்திகள்