Video: ஏம்மா... ஒரு ‘ஃப்ளோல’ போகும்போது Repeat எல்லாம் சொல்லாத.. ‘கடுப்பான’ குஷ்பு.. ‘வைரலாகும்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடியோ எடுத்த பெண்ணிடம் குஷ்பு கடுப்பாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய சென்ற நடிகை குஷ்புவை பாதி வழியில் போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய குஷ்பு, ‘அவரை எப்பவுமே அண்ணன் திருமாவளவன் என்றுதான் சொல்வேன். எப்போ பெண்களுக்கு எதிரா பேசினீங்களோ, இனிமேல் மரியாதை கொடுக்க முடியாது’ ஆவேசமாக பேசினார்.
அப்போது குஷ்புவின் பேச்சை வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒரு பெண் ஒருவர் திடீரென குறுக்கிட்டு, 'Repeat' என்றார். இதை பார்த்த குஷ்பு, “ஏம்மா... ஃபுளோவா போய்கிட்டு இருக்கும்போது Repeat எல்லாம் சொல்லாதே” என்று குஷ்பு கடுப்பானார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பிறகு மறுபடியும் முதலில் இருந்து பேச ஆரம்பித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்