‘பொங்கல்’ முடிந்து ‘அடுத்த’ நாள்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ நடந்த ‘கொடூரம்’... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரியில் தகாத உறவால் திருமணமான சில மாதங்களிலேயே புதுமாப்பிள்ளை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பொங்கல்’ முடிந்து ‘அடுத்த’ நாள்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ நடந்த ‘கொடூரம்’... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). வேன் ஓட்டுநராக வேலை செய்துவந்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் வீட்டருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய தலையில் யாரோ பாறாங்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. 

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தீர்த்த செல்வன் என்பவருடைய மனைவி ஈஸ்வரி என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவிற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது.

இதையறிந்த தீர்த்த செல்வன் எவ்வளவு கண்டித்தும் மாரிமுத்து கேட்காமல் தனது பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீர்த்த செல்வன் அவருடைய நண்பரான கோவிந்தராஜ் என்பவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். பின்னர் அவர்கள் கேசவன் என்ற மற்றொரு நண்பருடைய உதவியுடன் மாரிமுத்துவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கேசவன் மற்ற சில நண்பர்களுடன் சேர்த்து மாரிமுத்துவையும் ஏரிக்கரைக்கு குடிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு சென்ற கோவிந்தராஜிற்கும், மாரிமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மதுபோதையில் இருந்த மாரிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிருஷ்ணகிரி போலீசார் தீர்த்த செல்வன், கோவிந்தராஜ், கேசவன் ஆகிய 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

CRIME, MURDER, KRISHNAGIRI, MARRIAGE, AFFAIR, PONGAL