"பிக்பாஸ் விக்ரமனின் பரபரப்பு Post .. வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை கொண்டு வருவதில் இவ்வளவு இருக்கா?".. கௌசர் பாய்க் EXCLUSIVE பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த க/பெ ரணிசிங்கம் படத்தில் வெளிநாடுகளில் இருந்து இறந்த தொழிலாளர்களின் பிரேதங்களை இந்தியா & தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதில் இருக்ககூடிய நுண்ணரசியல் மற்றும் போராட்டங்கள் குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் இதில் உள்ள எதார்த்தம், பொது விஷயங்கள், ஏர்லைன்ஸில் கொண்டுவரும் முன் தான் சந்தித்த உருக்கமான விஷயங்கள் என பலவற்றையும் கௌசர் பாய்க் பிஹைண்ட்வுட்ஸில் உருக்கமாக பேசியுள்ளார்.

"பிக்பாஸ் விக்ரமனின் பரபரப்பு Post .. வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை கொண்டு வருவதில் இவ்வளவு இருக்கா?".. கௌசர் பாய்க் EXCLUSIVE பேட்டி!

Also Read | பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்.. அஸ்வின் - ஜடேஜாவின் ஜாலி ரீல்ஸ்😅.. மொத்த டீமும் கமெண்ட் அடிச்சிருக்கே..!

இதில் பேசிய அவர், “பொதுவாக வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் விசா அப்ளை செய்து வந்திருப்பார்கள். அவர்கள் அங்கு வெளியே செல்லும் பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை இல்லாமல் சென்று விடுவார்கள். அதில் ஏதேனும் சிக்கல் சிரமங்கள் நேர்ந்தாலோ, உயிரிழப்புகள் நேரும்பொழுதோ அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும். சிலருக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கூட ஆகிவிடும். பிறகு அவர்கள் குறித்து தகவல்களை அவர்களது வீட்டாரிடத்தில் தெரிவிக்க வேண்டும். அவர்களது வீட்டாரிடத்தில் தெரிவிக்கும்பொழுது அவர்களது குடும்பச் சூழ்நிலை, குடும்பத்தில் மூத்தவர்கள் வயதானவர்கள் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு அந்த விஷயத்தை தன்மையாக சொல்ல வேண்டும், தேவைப்பட்டால் அக்கம் பக்கத்தினர் அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வழியாக அதை சொல்ல வேண்டும், இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. ஏனென்றால் நாம் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்த ஒருவருடைய இருப்பு குறித்த துயரச் செய்தியை சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

Kowser Baig about Bigg Boss Vikraman Post on death abroad

குறிப்பாக பிக்பாஸ் விக்ரமனின் பதிவு குறித்து பேசிய அவர், “முன்னதாக விக்ரமன் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் வெளிநாட்டில் இருந்தவருடைய உடலை கொண்டு வருவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அப்போதுதான் நான் அது குறித்து கவனம் பெற்றேன். விக்ரமனும் அப்போது என்னை தொடர்பு கொண்டார், அப்போதுதான் அவரிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக நாங்கள் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் நண்பர்களுடன் இணைத்து ஒரு வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கினோம். அங்கு தகவல்களை மட்டுமே நான் பதிவிட்டேன். அவர்கள் ஆவன செய்தார்கள். இப்படித்தான் அந்த பிரேதம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போதும் கூட விக்ரமன் ஃபாலோ பண்ணி என்ன நடந்தது அந்த பிரேதம் வந்துவிட்டதா என்று நினைவூட்டி கேட்டறிந்தார். அதன் பிறகே நான் நினைவு வந்து அதுகுறித்த வேலைகளை முடுக்கினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Kowser Baig about Bigg Boss Vikraman Post on death abroad

கௌசர் பாய்க் பகிரும் மேலும் பல அனுபவங்களையும் இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

Also Read | SS ராஜமௌலி - MM கீரவாணியின் Fire கெமிஸ்ட்ரியின் காரணம் இதுதானா?.. ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் Exclusive.!

KOWSER BAIG

மற்ற செய்திகள்