"நம்மூருல பொண்ணு பாக்கலாம்னா கேக்குறியா மணியா.?, 25 ஏக்கர் கேக்குறாங்க".. வரன் பார்க்க போன இடத்தில் புலம்பும் இளைஞர்.. வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேரடி வரன் பார்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற நிகழ்வின் போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | உலகின் 800 வது கோடி குழந்தை.. பிறந்தது எங்கே?.. பெயர் என்ன?? இணையத்தில் வைரலாகும் தகவல்!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் பலரும் கலந்து கொண்ட, "திருமண வரன்" பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏற்ற வரன்களை பார்த்து முடிவு செய்யவும் ஏராளமான ஆண்கள் அங்கே குடும்பத்துடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நேரடியாகவே, பெண் வீட்டார் மற்றும் ஆண் வீட்டார் இங்கே அனைத்து விஷயங்களையும் பேசி திருமணம்வரை முடிவு செய்வார்கள் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் மண்டபத்தின் அருகே திரண்டுளளனர் . அப்படி ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அதில் பேசும் இளைஞர், "என்னங்கண்ணா ஜாதகம் பார்க்க வந்தா இப்படி இருக்குது கூட்டம். நம்ம ஜாதகம் எல்லாம் உள்ள போகுமா இல்ல தண்ணில அடிச்சிட்டு தான் போகுமா. நான் அப்பவே சொன்னேன் மணியா, கேக்குறீங்களா. நம்ம ஊரிலேயே பொண்ணு பார்க்கலாம்னு பார்த்தா அதை விட்டுட்டு இங்க ஜாதகம் கொண்டு வந்து இந்த கூட்டத்துக்கு நடுவுல, நம்ம ஜாதகம் எல்லாம் உள்ள போகாது மணியா. அதோ உள்ள பூரா பசங்க வீட்டுக்காரங்க தான் இருக்காங்க பொண்ணு வீட்டுக்காரங்க ஒருத்தர கூட காணோம். கேக்குறவங்க பூரா 25 ஏக்கர் இருக்கான்னு கேக்குறாங்க. அவ்வளவு இருந்தா நான் ஏன் இங்கே வர போறேன்" என ஏக்கத்துடன் நபர் பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொங்கு நாட்டு இளைஞர்களின் வெசனம் 😓😓 pic.twitter.com/3DdB15x92E
— கோயம்புத்தூரான் (@Coimbatoraan) November 16, 2022
Also Read | 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
மற்ற செய்திகள்