இளம் மகனை விபத்தில் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு.! கோவையை உலுக்கிய சோகம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரே மகன் உயிரிழந்த துக்கத்தில் இருந்த பெற்றோர்கள் கடைசியில் எடுத்த துயர முடிவு, கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளி அருகே அமைந்துள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது 46).
இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சஞ்சீவின் மனைவி பெயர் நந்தினி. சஞ்சீவ் - நந்தினி தம்பதியரின் ஒரே மகன் ரவி கிருஷ்ணா (வயது 22). இவர் கல்லூரியில் படித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் பேரூர் அருகேயுள்ள ரிசார்ட் ஒன்றிற்கும் ரவி கிருஷ்ணா சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கொண்டாடி முடித்து விட்டு மறுநாள் காலையில் தனது நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பி உள்ளார் ரவி கிருஷ்ணா. கார் தென்னமநல்லூர் என்னும் பகுதி அருகே வந்த போது கட்டுப்பாட்டை கார் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், அங்கே இருந்த தோட்டம் ஒன்றில் இருந்த கிணற்றிற்குள் ரவி கிருஷ்ணா மற்றும் நண்பர்கள் சென்ற கார் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் ரவி கிருஷ்ணா உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது. தங்களின் ஒரே மகனான ரவி கிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழந்ததால் கடும் சோகத்திலும் சஞ்சீவ் மற்றும் நந்தினி ஆகியோர் இருந்துள்ளனர். மனவேதனை அடைந்து துக்கத்தில் இருந்த தாய் மற்றும் தந்தை ஆகியோர், துயர முடிவையும் எடுத்துள்ளனர்.
வீட்டில் இருந்த சஞ்சீவ் - நந்தினி தம்பதியினர், விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளனர். இதனிடையே, நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பல முறை முயற்சித்தும் போனை யாரும் எடுக்கவில்லை என்பதால், சந்தேகம் அடைந்த நந்தினியின் அண்ணன், சஞ்சீவ் வீட்டிற்கும் சென்றுள்ளார்.
அங்கே தனது சகோதரி மற்றும் சஞ்சீவ் ஆகியோர், அங்கே மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்டதும் பதறிப் போன அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் மற்றும் நந்தினி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்த பெற்றோர்கள் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விஷயம், அவரது குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தி உள்ளது.
மற்ற செய்திகள்