"வாழ்வு, சாவு ரெண்டுலையும் ஒன்னா தான் இருப்போம்".. கணவரை தொடர்ந்து மனைவிக்கும் நேர்ந்த துயரம்!!... சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சோமனூர் சங்கத் தலைவராக பழனிசாமி என்பவர் இருந்து வந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இவர் விசைத்தறி தொழிலாளர்களுக்காக தனது வாழ்வில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர் ஆவார். அது மட்டுமல்லாமல், கூலி உயர்வு, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் பழனிசாமி நடத்தி உள்ளார்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் வயதின் மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக பழனிச்சாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்படி இருக்கையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரது உடல் சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. பழனிசாமி மறைவு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தொழிலாளர்கள் உட்பட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மற்றொரு துயரமும் பழனிசாமி வீட்டாரை சூழ்ந்து கொண்டது. கணவர் பழனிசாமி மறைவால் கலங்கி போயிருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போன சூழலில், அவரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, பழனிசாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகிய இருவரின் உடலும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டது. இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததுடன் மட்டுமில்லாமல் இறப்பிலும் இணைபிரியா தம்பதிகளாக இருந்த பழனிசாமி மற்றும் கருப்பாத்தாள் ஆகியோரை நினைத்து அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Also Read | "ஒரு மாசம் அதை நெனச்சு அழுதேன்".. சிக்கித் தவித்த இஷாந்த்.. தோனி, தவான் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி பின்னணி!!
மற்ற செய்திகள்