லாக்டவுனை ‘கனக்கச்சிதமா’ யூஸ் பண்ணீட்டாங்க.. ‘6 மாசத்துல 5 லட்சம்’.. கோவையை கலக்கும் இளம்பெண்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்தி இரு மாணவிகள் தொழில்முனைவோராக மாறி அசத்தியுள்ளனர்.

லாக்டவுனை ‘கனக்கச்சிதமா’ யூஸ் பண்ணீட்டாங்க.. ‘6 மாசத்துல 5 லட்சம்’.. கோவையை கலக்கும் இளம்பெண்கள்..!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் உருவானது. இந்த சமயத்தை பயன்படுத்தி பலரும் தங்களது தனித்திறமையை வளர்த்துள்ளனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.

Kovai college students become a new entrepreneur using lockdown period

கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் திவ்யா மற்றும் தருணிகா, தனியார் கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்துள்ளனர். படிப்பை முடித்ததும் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என நினைத்துள்ளனர். இதை கொரோனா ஊரடங்கு காலத்தில் கனக்கச்சிதமாக பயன்படுத்தியுள்ளனர். தங்களது பெற்றோர்களிடம் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு, திருப்பூரில் ஆடைகளை வாங்கி, அதில் தங்களின் உத்திகளைப் புகுத்தி ஆடைகளை வடிவமைத்து ஆன்லைனில் விற்பனை செய்துள்ளனர்.

Kovai college students become a new entrepreneur using lockdown period

சுமார் 25 விதமான ஆடைகளை வடிவமைத்த மாணவிகள், அதை விளம்பரப்படுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தியுள்ளனர். இவர்களது ஆடைகளுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Kovai college students become a new entrepreneur using lockdown period

முதலில் வீட்டில் இருந்து இரண்டு இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்து வந்த நிலையில், மக்களின் அதிக வரவேற்பு காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து உதவிபெற்று தொழிலை விரிவுப்படுத்தியுள்ளனர். கடந்த ஆறு மாதத்தில் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்